Kogilavani / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கனேடிய அரசின் 18.6 மில்லியன் நிதியுதவியுடன் யு.என்.டி.பி நிறுவனத்தால் கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் அமைக்கவுள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் செவ்வாய்க்கிழமை (24) நாட்டப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சிக்கனக்கடனுதவி கூட்டுறவுச்சங்கத்தின் விதை உற்பத்தி, பரிகரிப்பு மற்றும் விற்பனை மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிலையம் இரண்டு வருடங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .