Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2016 மார்ச் 24 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் தனது மகனை அரச தரப்பு சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துவதாக 11ஆவது சந்தேகநபரின் தாயார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் புதன்கிழமை (23) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தத் தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் உறுதிப்படுத்தினார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 11ஆவது சந்தேகநபராக கைது செய்யப்பட்ட கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட நபர், அரச தரப்பு சாட்சியாக மாறி மன்றில் சாட்சியமளிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியன.
மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக தனியான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகி;ன்றது. இந்நிலையில் 11ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபரை மற்ற நபர்களுடன் சேர்;த்து மன்றில் ஆஜர்ப்படுத்தாமல், குற்றப்புலனாய்வுப் பொலிஸார் அவரை இரகசியமான முறையில் வேறு ஒரு தவணையில் மன்றில் ஆஜர்ப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை 11ஆவது சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பொலிஸார் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது, நீதிவான் ஏம்.எம்.எம்.றியால், சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்;டார். இந்தச் சந்தேகநபர் தனியாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
11ஆவது சந்தேகநபர், அரச சாட்சியாக மாற்றி, இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே சந்தேகநபரின் தாயார், தன் மகனை சாட்சியமாக மாறுமாறு குற்றப்புலனாய்வு பொலிஸார் துன்புறுத்துகின்றனர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த 11ஆவது சந்தேகநபரே, கொலை நடைபெறுவதற்கு முன்னைய தினமன்று மற்றைய சந்தேகநபர்களுக்கு மதுபானம் மற்றும் கஞ்சா ஆகியவற்றை கொண்டுசென்று வழங்கினார் என, குற்றப்புலனாய்வு பொலிஸார் கடந்த 4ஆம் திகதி, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025