2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுக்கள் விற்றவருக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 16 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்பனை செய்த நவாலி பகுதியைச் சேர்ந்த வர்த்தகருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் செவ்வாய்க்கிழமை (15) தீர்ப்பளித்தார்.

இரகசியமான முறையில் வெளிநாட்டு சிகரெட்கள் விற்பனை செய்த குறித்த  வர்த்தகர் பற்றி இரகசிய தகவல் அறிந்து, கடந்த 10 ஆம் திகதி சிவில் உடையில் சென்ற பொலிஸார் பணம் கொடுத்து சிகரெட் வாங்கிய போது, வர்த்தகர் வெளிநாட்டு சிகரெட்களை வழங்கியுள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்த பொலிஸார், வர்த்தகரிடமிருந்து 19 சிகரெட்களை மீட்டனர்.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட வர்த்தகருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--