2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை   03 வயதுடைய பெண்  குழந்தையொன்று கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவானந்தன் தர்மினி (வயது 03) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்தக் குழந்தையின் தாய் சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தக் குழந்தை கிணற்றடிக்குச் சென்று தவறி கிணற்றினுள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிணற்றிலிருந்து சடலத்தை அச்சுவேலி பொலிஸார் மீட்டுள்ளனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--