2021 ஜனவரி 27, புதன்கிழமை

கடலட்டைகளுடன் 10 மீனவர்கள் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 08 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                  

                                                                                                                 (சுமித்தி)
யாழ். குருநகர் கடற்கரைப் பகுதியில் 1500 கடலட்டைகளுடன் 9 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள கடற்றொழில் பரிசோதகர் பா.ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.

9 மீனவர்கள் 3 ரோலர் படகுகளில் கடலட்டை பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தவேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு படகிலும் தலா  3 மீனவர்கள் உட்பட தலா 500 கடலட்டைகள் காணப்பட்டதாக அவர் கூறினார். மேற்படி மீனவர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .