2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

10,000 பேருக்கு புதிதாக ரெலிகொம் நிறுவனத்தின் கேபிள் தொலைபேசி இணைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இலங்கை ரெலிகொம் நிறுவனம்  தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ். மாவட்ட ரெலிகொம் நிறுவனம் அறிவித்துள்ளது

யாழ். மக்களில் பத்தாயிரம் பேருக்கு புதிதாக கேபிள் தொலைபேசி இணைப்புக்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இந்நடவடிக்கைக்காக பல பகுதிகளில் தொலைபேசி பரிவர்த்தனை நிலையங்களை அமைக்கவும் அதன் மூலம் கூடுதலான மக்களுக்கு இணைப்பை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் யாழ். மாவட்ட ரெலிகொம் நிறுவனம் குறிப்பிட்டது.

தற்போது யாழில் 500 பேருக்கு புதிதாக இணைப்பை தமது நிறுவனம் வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட ரெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X