2021 ஜனவரி 20, புதன்கிழமை

சிறுமி வல்லுறவு; குடும்பஸ்தர் நையப்புடைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரண்டு பிள்ளைகளின் தந்தையை கையும் களவுமாக பிடித்த பிரதேசவாசிகள், அவரை நையப்புடைத்து ஊர்வலமாக அழைத்து சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வாழும் 14 வயதுச் சிறுமியே குறிப்பிட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரினால் நேற்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை ஏமாற்றி ஆள் நடமாற்றம் அற்ற காணிக்குள் அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டு இருந்தவேளையில் அயலவர்கள்  இளைஞர்களுடன் இணைந்து குறிப்பிட்ட நபரை பிடித்துள்ளார்கள்.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குறித்த சந்தேக நபர், காங்கேசன்துறை வீதியால் ஊர்வலமாக  அழைத்து செல்லப்பட்டு  சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட இந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .