2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த புதன், வியாழக்கிழமைகளில் அதிபர் மா.நாகேந்திரசிலன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முதல் நாள் நிகழ்வுகளின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலெஸ்ரின் உதயன் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளின்போது வடமாகாண ஆளுனர் சந்திரஸ்ரீ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவு மலரை வெளிட்டு வைக்க, முன்னாள் பாடசாலை ஆசிரியையும் வலி. வடக்கு பிரதேசசபை தலைவருமான திருமதி பாலாம்பிகை ஸ்ரீ பாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.

மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--