2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர்

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவிற்கு இலங்கையிலிருந்து 200 பேர் தென்னாபிரிக்காவிற்குச் செல்லவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்தார் அமைச்சர். மேலும் குறிப்பிட்டதாவது...

உலக ஜனநாயக வாலிபர் சமமேளனமும் உலகம் பூராவுமுள்ள மாணவர் இயக்கங்களுடன் சேர்ந்து 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழாவை கோலாகலமாக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை தென்னாபிரிக்காவில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இலங்கையில் பல அரசியல் கொள்கைகளைக் கொண்ட வாலிபர் – மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 'உலக சமாதானத்தை ஆதரிப்போம்! சமுதாய மாற்றத்திற்காக ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிப்போம்' என்ற செய்தியோடு 17ஆவது உலக வாலிபர் – மாணவர் விழா நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--