2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ் மாவட்ட அபிவிருத்திக்கு 1700 கோடி ரூபா தேவை

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு சுமார் 1,700 கோடி ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக 5 வருடத் திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படவேண்டிய 1646 திட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் மக்களின் வீடமைப்பு,  சுகாதாரம்,  குடிநீர், வீதி அபிவிருத்திகள் முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலய மீள்குடியேற்றம்,  இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு என்பவற்றிற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 60 ஆயிரம் வீடுகள் புதிதாகவும் அல்லது பகுதியாகவும் கட்டுமானம் செய்யப்படவேண்டியுள்ளது. 27 ஆயிரம் பெண்கள் யுத்தம் மற்றும் இயற்கையினால் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதே  விசேட நோக்கமாகவுள்ளது என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆயுதத்திலிருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய உறுப்பினர்கள் இச்சம்பவங்களை  செய்து வருவதுடன் இவர்கள் குடும்பச்சுமை,  வறுமை காரணமாகவும மற்றும் தொழிலின்மை காரணமாகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூகச்சீர்திருத்தத்திற்கு பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--