2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வடமராட்சி மீனவர்களின் நன்மை கருதி ஐஸ்கட்டி உற்பத்தி நிலையம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதி மீனவர்களின் நன்மை கருதி 1.5 கோடி ரூபா செலவில் ஐஸ்கட்டி உற்பத்தி நிலையமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்துக்கு சொந்தமான பொலிகண்டிப் பகுதியில் அமைந்துள்ள காணியில் இந்த ஐஸ்கட்டிஉற்பத்தி நிலையம்  துரிதகதியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சில தினங்களில் இது இயங்க ஆரம்பித்து விடும் எனவும்வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின்தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

இதுநாள்வரையும் மீன்கள் பழுதடையாது இருப்பதற்காக தென்னிலங்கையிலிருந்தே வடமராட்சிப் பகுதி மீனவர்கள் ஐஸ்கட்டிகளைத் தருவிக்க வேண்டியிருந்ததாகவும் எனினும், தற்போது பொலிகண்டியில் அமைக்கப்பட்டுவரும் ஐஸ்கட்டி
உற்பத்தி நிலையம் இயங்க ஆரம்பித்ததும் மீனவர்கள் ஐஸ்கட்டிக்காகச் செலவிடும் பணம் பாதியாகக் குறைவடைவதால் அவர்கள் அதிக நன்மையடைவர் என்று ஈ.பி.டி.பி.அமைப்பின் வல்வெட்டித்துறைப் பொறுப்பாளர் தெய்வேந்திரம் குறிப்பிட்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X