Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். குடாநாட்டுக்கு வருகை தரும் மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் உரிய வகையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படாதவிடத்து டெங்கு நுளம்பின் பெருக்கம் மீண்டும் அதிகரிக்கும் நிலை தோன்றும் என்று யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-
தற்போது பாடசாலை விடுமுறை காரணமாக யாழ். குடாநாட்டில் ஆலயங்கள், திருவிழாக்கள் போன்றன இடம்பெற்று வருவதாலும் வெளியிடங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பொலித்தீன் பைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் பொருட்கள் போடப்படும் நிலைமைகள் தோன்றும். இவற்றை உரிய வகையில் அகற்றப்படாது விடும் பட்சத்தில் டெங்கு நுளம்புகள் அப்பகுதிகளில் பெருகும் நிலை தொன்றும்.
எனவே, இவ்விடயம் குறித்து அனைவரும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்று சுகாதாரப் பணிப்பாளர் மேலும் கூறினார்.
36 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago