Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
கடந்தகாலச் சம்பவங்கள் மற்றும் மனநோய்க்கு உட்பட்டு பராமரிப்பு இன்றி அநாதைகளாகவும் தனிமையாகவும் இருந்து வாடும் பெண்களை பராமரிப்பதற்காக தனியார் ஒருவரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவமங்கை நிவாசத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு கோப்பாய் கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது .
முன்னாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி பொன் பாலசுந்தரம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மங்கள்அ விளக்கை செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் கலாநிதி நா.சண்முகலிங்கன், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரசிங்க, உளநலத்துறை வைத்திய நிபுணர் எஸ்.சிவயோகன் நல்லை ஆதீனகுரு முதல்வர் உட்பட மற்றும் பலர் ஏற்றி வைத்தனர்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆறு திருமுருகனுடன் கட்டிடத்தை கட்டிய சுவர்னலீலா நவரத்தினமும் இஇணைந்து மேற்படி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
.jpg)
24 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
1 hours ago