Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களை குடும்பத்தலைவராகவும் பாடசாலை மாணவர்களை குடும்ப அங்கத்தவர்களாகக் கொண்ட இரு குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சைக்கிள்களை அன்பளிப்புச் செய்தார்.
யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த விஜயகுமார் சதீஸ்குமார் மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த க.கலாவதனா ஆகியோரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து சைக்கிள்களைப் பெற்றுக் கொண்டவர்களாவர்.
பாடசாலை செல்லும் மேற்படி மாணவர்கள் இருவரும் படிப்பில் திறமை காட்டிவருவதுடன் சகோதர சகோதரிகளையும் கொண்டுள்ளனர். எனினும் போக்குவரத்து செய்வதற்கு தமக்கென சைக்கிள் இல்லாத நிலையில் தத்தமது பிரதேச ஈ.பி.டி.பி. பொறுப்பாளர்கள் ஊடாக மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்தனர்.
இவ்வேண்டுகோளின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதி ஊடாக இரு புதிய சைக்கிள்களை அம்மாணவர்களுக்கு கையளித்ததுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஊக்கப்படுத்தினார்.
.jpg)
30 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago