Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக நேற்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
சுன்னாகம் கந்தரோடை வீதியிலுள்ள க.சாரங்கன் (வயது 30) என்ற மாணவனே இவ்வாறு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறிப்பிட்ட மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக குறித்த மாணவனின் நடமாட்டம் இல்லாதக் கண்டு அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள், வீட்டில் மின்விளக்குகள் எரிவதுடன் துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர். மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026