2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி மரணம்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம், சரண்யா)

இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருதனார் மடம் பெண்கள் விடுதி ஒன்றைச் சேர்ந்த காவலாளி, சிகிச்சை பயனளிக்காமையால் இன்று அதிகாலை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:

நேற்று நள்ளிரவு மருதனார்மடம், உரும்பிராய் வீதியில் அமைந்துள்ள குறித்த விடுதியினுள் நுழைந்த இனம் தெரியாத நபர், பெண்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியதாகவும் இந்த சத்தத்தைக்கேட்டு காவலாளியாக கடமையாற்றிய முத்து லட்சுமணன் (வயது 65) என்பவர் சென்று பார்க்க முற்பட்டவேளையில் ஒருவர் வந்து தாக்கியதுடன் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

படுகாயமுற்ற நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இவர் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X