Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
நல்லூரில் ஆலயச் சூழலில் இருந்து நல்லூர் நாவலர் மண்டபத்துக்கு மாற்றப்பட்டிருந்த நாவலர் பெருமானின் திருவுருவச்சிலை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நல்லூர் நாவலர் மணிமண்டபம் அமைந்துள்ள இடத்திலேயே நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை முன்னர் அமைந்திருந்தது. பின்னர் அது நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்துக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை அந்தணர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் புடைசூழ, நல்லூர் கோயில்வீதி வழியாக ஊர்வலமாகச் சிலை எடுத்துவரப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் உட்பட பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago