Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் விரைவில் தங்களின் சொந்த மண்ணில் சொந்த இடங்களில் மீளக்குடியமரும் வாய்ப்புக் கிட்டியுள்ளது என்று தெரிவித்தார் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்.
நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட உலக அஞ்சல் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ்.மாவட்டத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை பலாலி தலைமையக படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க மேற்கொண்டு வருகின்றார்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கண்ணிவெடி உள்ள பிரதேசங்களை மட்டும் இனங்கண்டு அப்பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்ட பின்னர் ஏனைய பிரதேசங்கள் உடனடியாகவே விடுவிக்கப்படும்.அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர்.
இதன் ஒரு பகுதியாகவே வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றத்துக்காக அனுமதிக்கப்பட்டன. எதிர்வரும் 9 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக வடமராட்சி கிழக்கில் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடியமர உள்ளனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களிலும் மீள்குடியமர்வு இடம்பெறும். இனிவரும் காலங்களின் யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க படைத்தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.- என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago