Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். மாவட்டத்தில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் மாத்திரமே பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்களுடன் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் 10 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி உதவியாளர் வி.ஜே. அருந்தவநாதன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் நஷ்டத்தில் இயங்கும் சங்கங்களை அதில் இருந்து மீட்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதன்போதே சகல சங்கங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட ஒரே விலையில் பொருள்களை விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் தனியார் வர்த்தகர்களுடனான போட்டிக்கு ஈடுகொடுப்பதுடன் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு கூட்டுறவுச் சங்கங்களை இலாபகரமானதாக இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் வியாழக்கிழமை இதுதொடர்பாக பகிரங்கக் கேள்வி கோரப்பட்டு அதன் பின்னர் பொருள்களுக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் விலை வேறுபாடுகளைத் தவிர்க்கும் நோக்குடன் ஒரே விநியோகஸ்தரிடம் பொருள்கள் கொள்வனவு செய்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago