2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்குப் பகுதியில் மீள்குடியேறியுள்ள  மீனவக் குடும்பங்களில் 56 பேருக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குரிய உபகரணங்களை வழங்குவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனமான 'பாசிக்' நிறுவனம் முன்வந்துள்ளது.

மீன்பிடிப் படகுகள் அவற்றுக்கான வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு இந்த நிறுவனம் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவற்றை வழங்குவதற்கான பயனாளிகளை யாழ். பிராந்திய நீரியல் மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர், வடமராட்சி கிழக்கு உதவி அரச அதிபர், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் இணைந்து தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--