Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து 9.15 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார்.
மறுநாள் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கற்கோவளம் கடலில் சமுத்திர தீர்த்தம் இடம்பெறும். சுவாமி 3 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலை அடைந்து அங்கு தீர்த்தம் இடம்பெறும்.
இம்முறை பக்தர்கள் கடலுக்குச் சென்று தீர்த்தம் ஆடுவதற்குப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் கேணித்தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.
தேர், தீர்த்தத் திருவிழாக்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து, குடிதண்ணீர், சுகாதார வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளன.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago