2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

செய்கை பண்ணப்படாதுள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளத் திட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                          alt   (நவம்)

யாழ் மாவட்டத்தில் செய்கை பண்ணப்பாடாமல் இருக்கும் காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இதற்காக வேண்டி செய்கை பண்ணப்படாது தரிசாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திருநெல்வேலி விவசாயத் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய விலங்கு வேளான்மை கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ் மாவட்டத்தில் பல காணிகள் விவசாய தோட்டச் செய்கைக்கு பயன்படுத்தப்படாமல் காணப்படுகின்றன. இத்தகைய காணிகளை இனங்கண்டு, அவற்றை கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட வறிய மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகை பேசி பெற்றுக் கொடுத்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக வறுமையைப் போக்குவதுடன் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--