2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கழிவுகளை அகற்ற பணம் அறவிடத் திட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

யாழ்ப்பாணம் யாழ். நகர வர்த்தகர்களிடம் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு பணம் அறவிடுவதற்கு முன்னோடியாக வர்த்தக நிலையங்களுக்கு விபரப்படிவங்களை வழங்கி வருவதாக யாழ். நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த சில நாட்களுக்கு  யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கும் யாழ். மாநகரசபை மேஜருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஒரு முடிவு எட்டப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய நடைமுறையாக பணம் அறவிடும் நோக்கில் படிவங்களை வர்த்தக நிலையங்களுக்கு வழங்கி வருவதாக வர்த்தகாகள் குறிப்பிடுகின்றார்கள்.
 
காலை மாலையில் மாநகரசபையின் வாகனங்கள் குப்பைகளை வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்றுச் செல்லும் எனவும் குறிப்பிட்டளவு குப்பைகளுக்கு மேல் காணப்படுமாக இருந்தால் அதற்கு ஒரு பரலுக்கு இருநூறு ரூபாவில் இருந்து கட்டணம் அறவிடப்படலாம் எனவும் எதிர்பார்ப்பதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.    
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--