2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் சமூக நலத் திட்டங்கள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

51ஆவது படையணியால் மானிப்பாயில் கடந்த செவ்வாயன்று சில சமூக நலத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது, யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும் நேர்மையான முயற்சிகளை அரசாங்க ஊழியர்கள் பாராட்டினார்கள்.

யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் கல்வி, வாழ்வாதாரம், போஷாக்கு என்பவற்றை உயர்த்துவதில் யாழ். தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்கவும் அவரது அதிகாரிகளும் காட்டி வரும் அக்கறைக்கு நான் எனது நன்றியை தெரிவிக்கின்றேன் என மானிப்பாய் பிரதேசசபை கேட்போர்கூடத்தில் நடந்த நிகழ்வில் பேசும்போது விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி வி.அமிர்தலிங்கம் கூறினார்.

இந்நிகழ்வு மேஜர் ஜெனரல் ஜனக வெலிகமவால் தலைமை தாங்கப்படும் 51ஆவது படையணியால் மானிப்பாயிலுள்ள 400 அகதிக் குடும்பங்களுக்கு 4000 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை விநியோகிப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. படையணிகளின் தளபதிகளின் வழிகாட்டுதலினை ஏற்று 511, 512, 513 படையணிகளின் படைப் பிரிவினர்கள் இந்த நற்பணிக்கு தமது பங்களிப்பினை வழங்கினர்.

யாழ். மாவட்ட சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்து பிள்ளைகளிடம் மந்தபோஷாக்கு காணப்படுவதினை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறான குடும்பங்களின் பொருளாதார நிலைக்கு ஆதரவு வழங்கவும் மந்தபோஷாக்கை இயன்றளவு குறைக்கவும் யாழ்ப்பாண பாதுகாப்பு படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் வழிநடத்தலில் பாதுகாப்புப் படையினர் 6000 குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

51, 52 பிரிவுகள் இதுவரை 800 கோழிக்குஞ்சுகளை 480 வறிய குடும்பங்களுக்கு வழங்கியுள்ளன. மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய நடன நிகழ்வொன்றை வழங்கினர்.

பிரதேச செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--