Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலய நூற்றாண்டுவிழா நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய அதிபர் நா.சிவனேசன் தலைமையில் இடம்பெற்றன.
சுன்னாகம் பூதராயர் கோவிலில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆலயத்தில் இருந்து விருந்தினர்களை வித்தியாலய பாண்ட் வாத்திய அணியுடன் ஊர்வலமாக வித்தியாலய விழா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் ஆறு திருமுருகன், வலிகாமம் கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி சறோஜினிதேவி குலேந்திரா, ஏழாலை மகா வித்தியாலய ஆசிரியை திருமதி லோ.சிவலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி க.பரமசுவாமி உட்பட மற்றும் பலர் மங்கல விளக்கை ஏற்றி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா மலரினை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க ஓய்வு பெற்ற தொழில் நுட்ப அலுவலர் குலேந்திரா முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மலர் அறிமுகவுரையை பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுந்தரசிவம் நிகழ்த்த, மலர் ஆய்வினை அகவிழி பிரதம ஆசிரியர் மதுசூதனன் நிகழ்த்தினார்.
நினைவுப் பேருரையை ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி க.பரமசுவாமி நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago