2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

லொறி கவிழ்ந்து, சாரதி ஸ்தலத்தில் பலி!

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ், நவம்)

யாழ். சுன்னாகத்தில் இருந்து வடமராட்சிக்கு மணல் ஏற்றுவதற்காக இன்று காலை 7 மணியளவில் சென்றுகொண்டிருந்த லொறி ஒன்று வல்லைவெளிப் பகுதியில் கவிழ்ந்ததில் லொறிச் சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த செல்லத்துரை ஜெகன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

வல்லைவெளியில் பாலப்புனரமைப்புக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையின் ஊடாக இந்த லொறி சென்றுகொண்டிருந்த சமயம் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்துக்கு நேரில் சென்ற பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--