2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மாணவன் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

மாதகல், சகாயபுரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் அவரது தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை, அந்தோனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்கும் குறித்த மாணவன், கடந்த 15ஆம் திகதி காணாமல் போயுள்ளதாகவும் இது விடயம் குறித்து கடந்த 20ஆம் திகதியே தனக்குத் தகவல் தெரிந்ததாகவும் இது விடயம் குறித்துப் பாடசாலைச் சமூகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தாயார் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை அந்தோனியார் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் ஸ்ரீமுருகன் குருபரன் (வயது- 12) என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--