2021 மார்ச் 06, சனிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை கட்டடப் பணியாளர் காயம்

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கட்டடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தென்னிலங்கைத் தொழிலாளர்கள், மேல் மாடியில் இருந்து விழுந்ததில் படுகாயங்களுக்கு ஆளாகிய நிலையில் வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தென்னிலங்கை கட்டடப் பணியாளர்கள்  இருவரே இவ்வாறு காயமடைந்தவர்கள் ஆவர்.
 
மேல் மாடியில் கட்டடப் பணியில் லிப்ட் பொருத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையில் பணி செய்வதற்காக போடப்பட்டு இருந்த பலகை உடைந்ததால் இவர்கள் வீழ்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .