Super User / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சங்கவி)
யாழ்ப்பாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் மையம் ஒன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் வின்ரூட் கொன்மே, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு தகவல் மையத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகர் வின்ரூட் கொன்மே உரையாற்றுகையில்:
யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல் சேவையைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டே இன்று இந்த தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே யாழ். மக்கள் இச் சேவையைப் பெற்றுக்கொள்கின்றனர். இத்தகைய சிரமங்கள் இனிவரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும். – என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago