Super User / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சின் எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பத்து லட்சம் மரநடுகைத் திட்டம் இந்த மாத இறுதி வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
தனியார் வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், பொது இடங்கள், மயானங்கள், மற்றும் வீதிகள், கடற்கரை வீதிகள் என இந்த நடவடிக்கை விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக யாழ். மாவட்டத்தில் உள்ள 1925 குடும்பங்களுக்கு பயனுள்ள பழ மரங்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணம் நகரப் பகுதி தவிர்ந்து ஏனைய பிரதேச செயலகங்கள் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இந்தத் திட்டம் செயல்முறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் யாவும் தற்போது பிரதேச செயலர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடன் இணைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விவசாயப் போதனாசிரியர்கள் தமது பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம அலுவலர்களுடன் இணைந்து பயனாளிகள் தெரிவு இடம் பெறவுள்ளது. காரைநகர், மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் நல்லூர், சங்கானை, சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், கரவெட்டி, சண்டிலிப்பாய், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தலா 100 குடும்பங்களுக்கும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களுக்கும், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 300 குடும்பங்களுக்கும், ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 250 குடும்பங்களுக்கும், நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 200 குடும்பங்களுக்கும் இந்த பழமரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.
11 minute ago
24 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
29 minute ago