2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

நாடளாவிய ரீதியில் போதனா வைத்தியசாலைகளில் விசேட கண்சிகிச்சை

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

நாடளாவிய ரீதியில் 8 லட்சத்தி 52 ஆயிரம் பேர் பார்வைக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனைக் கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள 10 போதனா வைத்தியசாலைகளிலும் விசேட கண்சிகிச்சை முகாம்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பார்வைக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 8 லட்சத்தி 52 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்தி  50 ஆயிரம் பேர் மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27ஆம் திகதி விசேட கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

'விஷன் - 2020' என்ற நிறுவனம் இதற்கான நிதியுதவியைச் செய்யவுள்ளது.

இந்த கண் சிகிச்சை முகாம் யாழ். போதனா வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. இதற்கென தென்னிலங்கையில் இருந்து விசேட கண் வைத்திய நிபுணர்கள் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள கண்சிகிச்சை முகாமுக்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--