2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக வன்னிப்பகுதிக்கு மதுபானங்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வன்னிப்பகுதிக்கு மதுபானவகைகள் கொண்டு செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் மக்கள்  மீளக்குடியேறத் தொடங்கிய பின்னர் சில   இடங்களில் இன்னமும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் குடாநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மதுபான  வகைகளை வன்னிப் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
 
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்குச் செல்லும் தனியார் பேரூந்துகளில் மதுபானப் போத்தல்கள் பொதி செய்யப்பட்டு மறைவாக எடுத்துச்  செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வன்னிக்குச் செல்லும் பஸ்களில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இதன்போது சாவச்சேரி நகரப்பகுதியில் வைத்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான மதுபானப்போத்தல்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை. பஸ்களில் மதுபானப்போத்தல்களை வைத்து விட்டு சந்தேகநபர்கள் தலைமறைவாகி விடுவதாலேயே எவரையும்  இதுவரை கைது செய்யமுடியவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
 
இத்தகைய நடவடிக்கைகளைத்தடுக்க சிவில் உடையிலும் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .