2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

கொத்மலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கல்விக்குழு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட ஆரம்பக்கல்வி மாணவர்களின் நிலை தொடர்பாக ஆராய்வதற்கு நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலையில் இருந்து கல்விக் குழு ஒன்று இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளது.

இக்குழுவில் கொத்மலை வலயக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், ஆரம்ப உதவிக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் அடங்குவர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இக்குழு, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் தலைமையில் குறித்த பாடசாலைகளுக்கு நேரடி விஜயம் செய்து அவர்களின் கல்வி நிலை குறித்து ஆராந்துள்ளது.

யாழ். ஜோன். பொஸ்கோ, யாழ். இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை, சென். பெனடிக்ற், சென். ஜேம்ஸ் ஆகிய பாடசாலைக்கு இக்குழு விஜயம் செய்துள்ளது.

இதேவேளை, யாழ். வலயக் கல்விப் பணிமனைக்குச் சென்ற இக்குழு அங்குள்ள நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .