Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அரச தாதிய உத்தியோகத்தர்கள் 4 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று நடத்திய 3 மணித்தியாலயப் பணிப் பகிஷ்கரிப்பில் யாழ். மாவட்டத் தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.
நாடளவிய ரீதியில் உள்ள 10 பிரதான வைத்திய சாலைகளில் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தாதியர்கள் 12 வருட சேவைக் காலத்தில் முதலாம் தரத்தைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தல் வேண்டும். வாரத்தில் வேலைநாள்கள் 6ஆக இருப்பதை 5ஆகக் குறைத்தல் வேண்டும். தாதியர்களின் மேலதிக சம்பளத்தை 240 ஆல் பிரிப்பதை விடுத்து 180 ஆல் பிரித்தல் வேண்டும். 3 வருடங்களாகக் குறைக்கப்பட்ட தாதியர் பட்டப்படிப்பை மீண்டும் நான்கு வருடங்களாக மாற்றுதல் வேண்டும். ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago