2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆயர் வடக்குக்கு விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

யுத்தத்துக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகளை ஆராயும் பொருட்டு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆயர் பேரருட்திரு ஏ.டபிள்யூ. ஜெபநேசன் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு நாளை வெள்ளிக்கிழமை கல்லூரி சமூகம் வரவேற்பு அளிக்கவுள்ளது.

நாளை மறுதினம் சனிக்கிழமை மெதடிஸ்த திருச்சபையின் யாழ். சேகரத்தின் குருமனையை வண்ணார்பண்ணை தேவாலய வளாகத்தில் பிரதிர்ஷ்டை  செய்து வைக்கவுள்ளார்.

31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தூர் திருப்பணித்தளத்தில் சேகர முகாமைக்குரு அருட்திரு சி.கே. தங்கராஜா தலைமையில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதுடன் அன்று மாலை இடம்பெறும் திடப்படுத்தல் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அன்று மாலை 4 மணிக்கு பருத்தித்துறை கட்டைவேலி சேகரக்குரு அருட்திரு என். அருள்நாதன் தலைமையில் பருத்தித்துறை மெதடிஸ்த தேவாலயத்தில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

முதலாம் இரண்டாம், திகதிகளில் இவர் வன்னிப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .