Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திர சிகிச்சை கட்டில்களும் நோயாளர்களின் கட்டில்களும் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன.
யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, இந்தக் கட்டில்களை தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி அதிபர் உட்பட மற்றும் பலரும் படைத்தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.





42 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
1 hours ago