2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மூளாய் வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்று காலை வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அத்துடன் தரக்குறைவான வார்த்தைகளாலும் அந்த மருத்துவரை திட்டித் தீர்த்துள்ளதாகவும் மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் இது போன்ற அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டுள்ள நிலையில் அவரின் அத்துமீறிய செயல்களைக் கட்டுப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் தவறிவிட்டதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு களையப்படும் வரை பணிப்புறக்கணிப்பில் இன்று முதல் ஈடுபடுவதாக மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது கூட்டுறவு வைத்தியசாலையான மூளாய் வைத்தியசாலையின் செயற்பாடுகள் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பால் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--