2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே சித்திரப்போட்டி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தேசிய விஞ்ஞான மன்றத்தின் அனுசரணையுடன் தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் சித்திரப் போட்டியொன்றை நடத்தவுள்ளது.

வலய ரீதியாக நடைபெறவுள்ள முதற்கட்ட போட்டியிலிருந்து 20 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களது ஆக்கங்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டிக்காக அனுப்பிவைக்கப்படும்.

மாவட்ட மட்டத்தில் நடைபெறும் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலக விஞ்ஞான தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் பிரிவொன்றில் தரம் 6, 7, 8 ஆகியவையும், பிரிவு இரண்டில் தரம் 9, 10, 11 ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மாணவர்களது ஆக்கங்கள் 'காலநிலை மாற்றம்|| மற்றும் 'பூகோளம் வெப்பமாதல்|| என்னும் தொனிப்பொருளில் 18, 14 அங்குலத் தாளில் விரும்பிய சாதனத்தை உபயோகித்து ஒருவர் ஒரு ஆக்கம் என்ற ரீதியில் தயாரித்து அனுப்பலாமென்பதுடன், குறித்த தாளின் பின்புறத்தில் படைப்பாளியின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டு அது அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னராக  விஞ்ஞான தொழில்நுட்பவியல் உத்தியோகத்தர், யாழ். நகர், விதாதாவள நிலையம், 24 விதான்ஸ் லேன், சுண்டுக்குளி, யாழ்ப் பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--