Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகவள பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று முப்பது மணித்தியாலங்களுக்கான குறுகியகால காலத்தைக் கொண்ட பத்திரிகையியலுக்கான அடிப்படை ஊடகப் பயிற்சிநெறி ஊடகவள நிலைய பயிற்றுவிப்பாளரும் பயிற்சி இணைப்பளருமான இ.தேவானந் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்த பயிற்சி வகுப்பை லண்டனில் இருந்து வருகை தந்துள்ள ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான திருமதி.பியானோ பார்ட்டன் நடத்தினார்.
நேற்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், ஊடகவள நிலைய இயக்குனர் விமல் சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதல் பிரிவில் சுமார் எழுபது பேர் கலந்து கொண்டள்ளமையைத் தொடர்ந்து அதிகமானவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றொரு பிரிவினருக்கான வகுப்புகள் நடத்தப்படுவதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago