2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

யாழ். மாவட்ட அரச வைத்தியசாலைகளில் பணியாற்ற வைத்திய அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்ற வைத்திய அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சினால் விசேடமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. இப்பற்றாக்குறை தொடர்பாக யாழ். மாவட்ட சுகாதார சேவைகளின் மேம்பாடு சம்பந்தமான விசேட கலந்துரையாடலின்போது, சுகாதார
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைக் கவனத்தில் எடுத்த அமைச்சர், யாழ். மாவட்டத்தில் பணியாற்ற விரும்பும் வைத்திய அதிகாரிகளுக்கென விசேட விண்ணப்பங்கள் கோரப்பட்டு வேலைக்கு அமர்த்தப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் உறுதியளித்தபடி தற்போது வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கு வைத்திய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கையின் எப்பாகத்தில் எந்தத் தரத்திலும் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் யாழ். மாவட்டத்திலும் பணியாற்ற விண்ணப்பிக்க முடியும்.  விண்ணப்ப முடிவு திகதி நவம்பர் 29ஆம் திகதி ஆகும். யாழ். மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்ற விரும்பும் வைத்தியர்கள் யாழ். சுகாதாரசேவை பணிமனையுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு பிராந்தியச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0

  • vishva .shivan Tuesday, 09 November 2010 04:52 PM

    தாதியர் பயிற்சி கல்லூரயில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் அதன் முடிவு வெளியாகவில்லை. 500 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டிய விண்ணப்பங்களே ஏற்கப்பட்டன. ஆனால் முடிவு யாருக்கும் தெரியவில்லை என்ன நடந்தது ?கூறுவீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .