2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பிராந்தியப் பணிமனை திறப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியசபை,  தனது பிராந்தியப் பணிமனையினை நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைத்துள்ளது.

தொழிலாளர்களின் நன்மை கருதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பிராந்தியப் பணிமனையினை பாரம்பரியக் கைத்தொழில் சிறுகைத்தொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா திறந்துவைத்தார்.

இப்பிராந்திய அலுவலகம் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களுடைய எதிர்காலம் குறித்து அக்கறையுடன் செயற்படும் என ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கல குணரட்ன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார், ஊழியர் நம்பிக்கை நிதிய தலைவர் ஆர்.எம்.ஏ.கொடவத்த, முகாமைத்துவ இயக்குநர் ஜீ. திஸ்ஸ குட்டியாராய்ச்சி, மேலதிக பொதுமுகாமையாளர் மங்கல குணரட்ண, யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடபிராந்திய தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன், யாழ். பிராந்திய நிர்வாக இயக்குனர் ஜெயசுந்தர, பணிப்பாளர் சபை உறுப்பினர் பண்டிதரட்ன உள்ளிட்ட பெருமளவிலானோர் பங்குகொண்டனர்.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குகொண்டு பணிமனையினைத் திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். குடாநாட்டு பொதுமக்கள் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பயன்களை விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்வதற்கு எமது வேண்டுகோளை ஏற்று எமது பிரதேசத்திலேயே அதன் பணிமனையினை அமைப்பதற்கு ஆவண செய்தமைக்கு  நன்றி தெரிவித்தார்.  

ஊழியர் நம்பிக்கை நிதியமானது தனது 17ஆவது பிராந்தியப் பணிமனையினை யாழ்ப்பாணத்தில் திறந்துவைத்துள்ளது என்பதுடன், வடபகுதி அரச தனியார்துறை தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி சுயதொழில் முயற்சியாளர்களுக்கும் அதன் பயன்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .