2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அளவெட்டியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அளவெட்டி அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...

இன்று மாலை 6 மணியளவில் அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து 24 வயதுடைய சஞ்சீவ் என்னும் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. படுகாயமடைந்த மேற்படி இளைஞன் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கா மாற்றப்பட்டுள்ளார். இரண்டு கைகளிலும் வயிற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிகேரவிடம், தமிழ்மிரர் தொடர்புகொண்டு கேட்டபோது, துப்பாக்கி சூட்டில் இளைஞனொருவன் படுகாயமடைந்திருப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .