Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறிய மக்களுக்கு விவசாயச் செய்கையை மேற்கொள்ளும் பொருட்டு உதவுதொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணிப்பாளர் பற்றிக் றஞ்சன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் 20 பயனாளிகளுக்கு 8,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவொரு ஆரம்ப கட்ட நடவடிக்கை என்றும் இப்பணத்தைக் கொண்டு மீளவும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டுமெனவும் பணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்து உரையாற்றும் போது 'மீள்குடியேறிவரும் மக்களது பல்வேறு கோரிக்கைகளும் தேவைகளும் படிப்படியாக நிறைவு செய்யப்படுமெனவும் அதற்கு அனைவரும் ஒன்றிந்த உழைப்பையும் ஒத்தாசையையும் நல்க வேண்டுமென்றும்' கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் சிறி ரங்கேஸ்வரன், ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிறீபதி உட்பட பெருமளவிலான பயனாளிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
29 minute ago