2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டி யாழ். மாவட்டத்தில் இன்று பல்வேறு விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிலையில் யாழ். நகரிலுள்ள ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் மாவட்ட இணைப்பாளர் கலாநிதி வீ.தங்கராஜா தலைமையில் இடம்பெற்ற பிறந்ததின கொண்டாட்டத்தில் சம்பிரதாய முறைப்படி பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம், ஆஸ்பத்திரி வீதி புனித மரியாள் தேவாலயம், நாகவிகாரை மற்றும் பள்ளிவாசல் என்பவற்றில் ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

மேலும் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோருக்கும் கைதடிப் பகுதியில் வாழும் வறிய மக்களுக்கும் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் கரவெட்டி குருநகர் பிரதேசங்களில் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.

யாழ். நகரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வுகளில் பங்குகொண்டோருக்கு ஜனாதிபதியின் உருவப் படங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .