2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். முஸ்லிம்களின் பிரதேசங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரதேசங்களை  புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கூரை வேலைக்கென 80 இலட்சம் ரூபாவும் சந்தையை புனரமைப்பதற்கு 85 இலட்சம் ரூபாவும் பொம்மைவெளி 9ஆம் குறுக்குத்தெரு வீதிகள் புனரமைப்பு மற்றும் வடிகால் அமைப்பிற்கு 2 கோடி 20 இலட்சம் ரூபாவும் சின்னப்பள்ளி மையவாடி வீதி புனரமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவும் வீராபிள்ளை வீதி புனரமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்  மாநகரசபை உறுப்பினர் சுபியான் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--