2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மீள்குடியேற்றப் பகுதிகளில் திருட்டு; பொதுமக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மீளக்குடியேறுவதற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கட்டிடப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களும் திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகி வருகின்றமையால், பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வலி வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பொருட்களை திருடிச்செல்வதில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளபோதிலும்,  இது தொடர்பில் எவரும் கவனம் எடுக்காத நிலைமை காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இளவாலை வடக்கு, இளவாலை தென்மேற்;கு மற்றும் வித்தகபுரம் பகுதிகளில் மீளக்குடியேறுவதற்கு படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

தற்போது இப்பகுதிகளில் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், பிரதான வீதியில் மாத்திரம்; பொதுமக்கள் சென்றுவரக்கூடியதாக இருக்கின்றபோதிலும், உள்பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.
உள்பகுதிகளிலுள்ள காணிகளில் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதுடன், பயம் காரணமாக  பொதுமக்கள் உள்புற காணிகளுக்குச் செல்லுவதற்கு பின்னடிக்கின்றனர்.

இதேவேளை, உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளின் கதவுகள்,  யன்னல்கள், ஓடுகளையும் வீடுகளை உடைத்து கற்களையும் திருடர்கள் திருடிச்செல்கின்றனர்.  

தமது வீடுகளை பார்வையிடச் செல்வதாக  கூறியே, ஒரு குழுவினர் தமது கைவரிசையைக் காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--