Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கோப்பாய் ஆசிரிய கலாசாலை தமிழ் சிறப்புநெறி இறுதியாண்டு ஆசிரிய மாணவி புத்தளம் தி.நந்தினியின் கண்ணீர் முத்துக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நாளை திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முத்தமிழ் மன்றத் தலைவர் அ.ல.பிலால் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலாசாலையிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசுவும் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் எம்.சீ.எம். அமீனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆசியுரையை கலாசாலை அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளையும் வெளியீட்டுரையயை முத்தமிழ் மன்றக் காப்பாளர் ச.லலீசனும் மதிப்பீட்டுரையை விரிவுரையாளர் ந.பார்த்திபனும் இந்நிகழ்வில் நிகழ்த்தவுள்ளனர்.
இவ்வாண்டில் முத்தமிழ் மன்றத்தினரால் வெளியிட்டு வைக்கப்படும் கவிதை நூல் இதுவாகும்.
அண்மையில் புத்தளம் அ.சுஜானாவால் எழுதப்பட்ட 'செதுக்கப்படாத சிற்பங்கள்' என்ற கவிதைத்தொகுதி அமைச்சர் ரிசாட் பதியுதீன் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.
7 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
13 minute ago
19 minute ago