Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கு ஜேர்மன் நாட்டு கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர்களான பிரான்ஸ் பெக்ரோபர் மற்றும் கொங்காஓபமன் ஆகியோரின் நிதியுதவியுடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இளையோர் விளையாட்டு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை கால்பந்தாட்டசங்கத்தினால் யாழ். மாவட்டப்பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்ட பாடசாலை அணிகளுக்கான கால்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ். கால்பந்தாட்ட லீக் தலைவர் கிளிபேட் அன்ரனிப்பிள்ளை, பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக் தலைவர் டி.எம்.வேதாபரணம், வலிகாமம் கால்பந்தாட்ட லீக் தலைவர் நா.நவரத்தினராசா, கிளிநொச்சி இளையோர் இணைப்பாளர் நிர்மலன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago
05 Jul 2025