Menaka Mookandi / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயல்த்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் 'கிராமச் செயலகம்' அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் அச்சுவேலி, கற்கோவளம், மணற்காடு ஆகிய கிராம அலுவலர் பிரிவிலும் கிராமச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் கரவெட்டி, நல்லூர் பிரதேச செயலகத்திலும் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நல்லூர் பிரதேச செயலக அரியாலை கிழக்கு நாவலடி J/190 கிராம அலுவலகர் பிரிவில் நேற்று திங்கட்கிழமை நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனினால் கிராமச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கிராமச் செயலகத்தில் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவுகள் இயங்கவுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago