2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சித்த ஆயுர்வேத கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்

Super User   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். லங்கா சித்த ஆயுர்வேத கல்லூரியின் புதிய கல்வியாண்டுக்கு ஆயுர்வேத டிப்ளோமா கற்கைநெறிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கல்லூரி நிர்வாகம் சபை கோரியுள்ளது.

இக்கற்கை நெறிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 தொடக்கம் 35 வயதுக்குட்ப்பட்டவராகவும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இரண்டு பாடங்களில் சித்திபெற்று கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், தமிழ் மொழியில் திறமைச்சித்தி பெற்றிருப்பது அவசியமாகும்.

இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன் மாகாணப் பணிப்பாளர் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், 55 மார்டின் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு  கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--